தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்து, அதன் பின்னர் காமெடியில் கலக்கி வருபவர் தான் மனோபாலா.
இவர், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலிலும் நடித்து வருகிறார்.
இதனையடுத்து, நடிகர் மனோபாலா, சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிப்பார்.
சினிமா பிரபலங்கள் மறைவின்போது இரங்கல் தெரிவிப்பார். இந்த நிலையில், பல நடிகர்கள் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டு வருவதால், மனோபாலாவும் ஒரு செல்ஃபி புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், உடல் நிலை சரியில்லாததுபோல் மிகவும் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் உடல் நிலை குறித்து கமெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
உடனே இதற்கு , நடிகர் மனோபாலா கதறிய படி ட்விட்டரில், “என் அன்பு மக்களே…நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்..
ஒண்ணுமில்லை…அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..” என்று பதிவிட்டார். ஆனாலும் விடாமல் நெட்டிசன்கள் பல கமெண்ட்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.
— Manobala (@manobalam) May 15, 2021