இலங்கை புகையிரத இயந்திர சாரதிகள் மற்றும் காவலர்கள் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் (17) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரயில் பயணிகள் மாற்று போக்குவரத்து முறைகளை பயன்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கூடுதல் அரச பேருந்துகள் நாளைய தினம் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.