கொரோனாவிற்கு நிதி உதவியாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சூர்யா, கார்த்தி ஆகியோர் முதலமைச்சரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கினார்கள்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம் ரூபாயை முதலமைச்சரிடம் வழங்கினார். நடிகர் அஜித் ஆன்லைன் மூலம் ரூபாய் 25 லட்சம் கொடுத்தார்.
மேலும் நடிகர் சிவர்கார்த்திகேயன் நேரில் சென்று, ரூ. 25 லட்சம் வழங்கினார். இயக்குனர் சங்கர் ரூ. 10 லட்சம் வழங்கினார்.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் இன்று கொரோனா நிதி உதவியாக ரூ. 30 லட்சம் வழங்கியுள்ளார்.



















