அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 5வது மாடியில் இருந்து குதித்து தப்பிய பூனையின் வீடியோ வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேறினர்.
அப்போது, தீ விபத்துக்குள்ளான மாடியில் சிக்கிக்கொண்ட பூனை ஒன்று தப்பிப்பதற்காக அலைமோதியுள்ளது.
சிறிது நேரத்தில் தீ மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவி புகைமூட்டம் சூழத் தொடங்கியது.
அப்போது கீழே இருந்தவர்கள் பலரும் தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தை செல்போன்களில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்த குடியிருப்பின் ஜன்னலில் இருந்து கருப்பு நிற பூனை ஒன்று குதித்தது.
கீழே இருந்து இதனைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். பூனை குதித்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி மிகப்பெரிய தடுப்பு சுவர் இருந்தது. அந்த சுவரின் மீது பூனை விழுந்துவிடுமோ? என அங்கிருந்தவர்கள் அஞ்சினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக தடுப்புச்சுவரையும் லாவகமாக தாண்டி உயிர்த்தப்பியுள்ளது.

Nine lives for a cat that jumped from fire at 65th and Lowe. Cat hit grass bounced and walked away! pic.twitter.com/LRBsjMta2Z
— Chicago Fire Media (@CFDMedia) May 13, 2021