கூகுள் தனது பயனர்களுக்கு புதிய சேவையை ஒன்றை வழங்கியுள்ளது. அதில் பயனர்கள் கடந்த 15 நிமிடங்களின் எந்தவொரு தேடல் வரலாற்றையும் எளிமையாக அழிக்க விரைவான வழியைக் கொண்டு வந்துள்ளது.
கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க இன்னும் அதிகமானவற்றைச் செய்ய பயனர்களிடமிருந்தும் எதிர்பார்ப்பு வருவதால் இந்த மாதிரியான செய்லபாடுகளில் ஈடுபடுகின்றனர்.
கூகுள் டெவலப்பர்களுக்கான வருடாந்திர கூகிள் I / O மாநாட்டில் இந்த புதிய ‘quick-delete’ அம்சத்தை அறிவித்தது.
இதுபற்றி கூகுள் மூத்த துணைத் தலைவரான ஜென் ஃபிட்ஸ்பாட்ரிக், ஆன்லைன் நிகழ்வில்,“நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் விற்க மாட்டோம். “இது வரம்பற்றது” என்று ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி வெளிவந்துள்ளது.
Step 1: உங்கள் கூகுள் கணக்கின் படத்தை கிளிக் செய்தவுடன்.ஒரு மெனு கீழ்தோன்றும்.
Step 2: கடைசி 15 நிமிடங்களை நீக்கு என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் மிக சமீபத்திய வரலாறு தரவு அழிக்கப்படும். கூகுள் நிகழ்வில் தொடங்கப்பட்ட பிற தனியுரிமை அம்சங்களையும் ப்ளூம்பெர்க் அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
மேலும் Android சாதனங்களுக்கான கடவுச்சொற்கள்(Password) மற்றும் தரவு (Data) பயன்பாட்டு அனுமதிகளைப் பாதுகாக்க கூடுதல் புதிய அம்சங்கள் இதில் அடங்கும்.
மேலும், தொழில்நுட்ப ரீதியாக செயல்படுத்தப்பட்ட, சரிபார்க்கக்கூடிய தனியுரிமையை வேறு யாரும் வழங்கவில்லை என்று ஃபிட்ஸ்பாட்ரிக் கூறினார்.