கொரோனா சிசிக்சை பெற்று வந்த பெண்ணை மருத்துவ ஊழியர்கள் வன்கொடுமை செய்து குறித்த பெண் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் பாட்னாவில் உள்ள பராஸ்-எச்.எம்.ஆர்.ஐ மருத்துவமனையில் மே 15ம் தேதியன்று கொரோனா தொற்று இருந்த 45 வயது பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்ததால் அவரை உடனே ஐசியூ வார்டுக்கு மாற்றியுள்ளனர். இதனை குறித்த மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் நோட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அன்று மாலை 6 குறித்த பெண்ணிற்கு மூன்று பேரும் வன்கொடுமை தொல்லை அளித்துள்ளது மட்டுமின்றி பின்பு மறுநாள் காலையிலும் தனது பணியை செய்வது போன்று மீண்டும் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்பு குறித்த பெண் இறந்துள்ள நிலையில், இதனை அவதானித்த அவரது மகள் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
பொலிசாரின் விசாரணையில், தங்களது மருத்துவமனையில் அவ்வாறு எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், மீண்டும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.



















