இந்திய மாநிலமான தமிழகத்தில் 24ம் திகதி முதல் ஒரு வாரத்தில் முழு ஊரடங்கினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் சூழ்நிலையில், மக்கள் சமூக இடைவெளியினை கடைபிடிக்காமல் இருப்பதால் இவ்வாறான முடிவினை எடுத்துள்ளது.
கடந்த 10ம் தேதியிலிருந்து 14 நாட்கள் சற்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை தமிழக அரசு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மீண்டும் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் ஏதுமின்றி ஊரடங்கினை பிறப்பித்துள்ளது.
இதனால் இன்றும், நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை அனைத்து கடைகளும், தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைகள் செயல்படும் என்று அறிவித்துள்ளது.
எதற்கெல்லாம் அனுமதி?
மருந்து கடைகள், பால் வியாபாரம் பெட்ரோல், டீசல் பங்க், ஏ.டி.எம், பத்திரிக்கை விநியோகம் இவைகளுக்கு அனுமதி
வேளான் விளை பொருட்கள், இடு பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி
உணவகங்களில் பார்சல் மட்டுமே அனுமதி
பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகம்.
மருத்துவ காரணங்களுக்கு மாவட்டங்களுக்குள் இ-பாஸ் இன்றி செல்ல அனுமதி.
மருத்துவம், இறப்பு காரணத்திற்காக வெளியூர் செல்பவர்களுக்கு இ-பாஸ் மூலம் பயணிக்கலாம்.
Swiggy, zomoto -நிறுவனங்கள் பார்சல் சேவைக்கு அனுமதி
எதற்கெல்லாம் தடை?
கடந்த 14 நாட்களாக காலை 10 மணிவரை செயல்பட்டு வந்த காய்கறி, கறி கடைகள், மளிகை கடைகள் இயங்க அனுமதி இல்லை.
போக்குவரத்து சேவை கிடையாது.