மட்டக்களப்பில் தமிழ் பாடசாலைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலகள் விசனக்களை வெளியிட்டுள்ளனர்.
சிங்கள பகுதிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டால் உடனே அதனை சுட்டிக்காட்டி பதிவிடுவோர் தமிழர் பகுதியில் இப்படியான விடங்களை கண்டுகொள்வதில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
எமது பூர்வீக தமிழ் பகுதியிலில் கல்வியை போதிக்கும் முக்கிய தமிழ் பாடசாலைகளில் பிரதான பெயர் பலகைகளின் நிலை இதுதான் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் , மட்டக்களப்பில் முக்கியமான முஸ்லீம் பாடசாலைகளில் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்ட மரியாதை தமிழ் பாடசாலைகளின் பிரதான பெயர்பலகையில் வழங்கப்படவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.