நாட்டில் ஜூன் 7ம் திகதிவரை பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகள் அனைத்தும் முடக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கூறியுள்ளார்.
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப் பகுதியில் சில்லறைக் கடைகள், பேக்கரிகள் மற்றும் மருந்தகங்கள் என்பன மாத்திரமே திறக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.