தமிழகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமும் பல உயிர்கள் பலியாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு பல விதமான தடுப்புகளை ஏற்படுத்தி மக்களை காப்பாற்ற முயற்சிக்கிறது.
அதே போல் அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கில் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என்று பிரபலங்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதள பக்கத்தில் ” நாளை சிரிக்க, சிறக்க இன்று உள்ளிருப்போம் உறவே ” என்ற விழிப்புணர்வு பதிவை செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவில், ” உள்ளிருந்தா உணவு யாரு தருவாங்க ” என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அந்த ரசிகருக்கு பதில் அளித்து பார்த்திபன் “சரியான செருப்படி கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கி விடுகிறது பசி “.
” இருந்தாலும் உள் இருந்தா உணவை உண்ண நாமிருப்போம் நாளை. இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும்” என்று தன் ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.