தமிழ் சினிமாவில் உடலை வறுத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்கள் குறைவு. அதிலும் எந்த கதாபாத்திரத்திற்கு எப்படி நடிக்க வேண்டும் என்பதற்கேற்ப நடித்து கொடுப்பவர்களில் டாப் நடிகராக இருப்பவர் விக்ரம்.
ஆரம்பகால சினிமாவில் ஓரளவிற்கு எட்டிய படங்கள் தான். ஆனால், பாலாவின் இயக்கத்தாலும் ஒருசில இயக்குநர்களிடன் வழிக்காட்டுதாலும் பல படங்கள் வெற்றி பெற்றது. அதில் சில படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் வண்ணம் அமைந்துள்ளது.
அதில் ஆரம்பகால சினிமாவில் காதல், கண்மணி, தந்துட்டேன் என்னை, காவல் கீதம், மீரா உள்ளீட்ட 7 படங்கள் பெரியளவில் தியேட்டர்களில் ஓடவில்லையாம். அதேநேரம் தயாரிப்பாளர்கள் நடுத்தெருவிற்கு வர காரணமாகவும் இருந்தாராம் விக்ரம்.
ஆனால், இதற்கு பின் பாலாவின் சேது படம் விக்ரம் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. உதவி இயக்குநராக விக்ரம் பாலாவிடம் பணியாற்றிய போது கூறிய வாக்கு தான் விக்ரமை இந்த இடத்திற்கு கொண்டு சென்றது.




















