சினிமாவில் நடிகைகளுக்கு அடுத்ததாக பேசப்படும் கதாபாத்திரமாக இருப்பது, அம்மா, அக்கா, அண்ணி ரோல் தான். அப்படியான கதாபாத்திரம் மூலம் நடித்து பல மொழிப்படங்களில் பிஸி நடிகைகளாக இருந்தும் வருகிறார்கள்.
அந்த வரிசையில் இருப்பவர் நடிகை சுரேகா வாணி. தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து, சமீபத்தில் தமிழில், விசுவாசம், மாஸ்டர் உள்ளிட்ட பல படங்கள் மூலம் பிரபலமாகி வருபவர் சுரேகா வாணி. சில வருடங்களுக்கு முன் அவரது கணவர் திடீரென மரணமடைந்தார்.
தற்போது மகள் சுப்ரிதாவுடன் வாழ்ந்து வருகிறார். படங்களில் பிரபலமானதை தொடர்ந்து சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டுவார். அதிலும் 43 வயதில் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து க்ளாமராக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
மகளுடன் ஹாட்டாக நடமாடிய வீடியோ சமீபத்தில் வைரலானதை தொடர்ந்து, நடிகை சுரேகா வாணியிடம், பலர் காதலித்து வருவதாக அவரிடமே கூறி உள்ளார்களாம். அதாவது இளம் கதாநாயகர்கள் உட்பட பல பேர் கல்யாணம் செய்ய ஆசையாக உள்ளது என கூறியுள்ளார்கள். மன்னித்து விடுங்கள் எனக்கு கல்யாணமாகி விட்டது.
எனக்கு 21 வயதில் சுப்ரியா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவரை ஒரு பெரிய நட்சத்திரமாக வேண்டியது என்னுடைய கனவு என அவர்களுக்கு கூறியுள்ளாராம்.




















