இந்திய கிரிக்கெட் வீரர்களை போன்று இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும் தங்களை திறமையை சிறப்பாக காட்டி வருகிறார்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலக கோப்பை போட்டியில் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 9 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பெரியளவில் பேசப்பட்ட இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை காட்டினர். அதில் முக்கிய பங்காற்றியவர் ஸ்மிருதி மந்தனா. சர்வதேச கிரிக்கெட்டில் இலக்கை துரத்தும்போது தொடர்ச்சியாக 10 அரை சதங்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா படைத்தவர்.
தற்போது கொரானா வைரஸ் காரணமாக பல்வேறு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயிற்சியில் ஈடுபட்டும், விளம்பரப்படங்களில் நடித்தும் வருகிறார் ஸ்ருமிதி. அவர் வெளியிடும் புகைப்படங்கள் நடிகைகளுக்கு இணையாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் ஸ்மிருதி விளம்பரத்தில் நடித்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
View this post on Instagram




















