வவுனியாவில் சுகாதார முறைகளை பின்பற்றி அமைதியான முறையில் வெசாக் வாரக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மே மாதம் பௌர்ணமி தினம் புத்தரின் பிறப்பை நினைவுபடுத்தி வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இம்முறை கோவிட் தொற்று தாக்கம் காரணமாக அமைதியான முறையில் சுகாதார முறைகளையும் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றி வெசாக் பண்டிகை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் வவுனியா பொலிஸ் நிலையம் மற்றும் வவுனியா பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு முன்னால் சிறிய வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டும் பௌத்த கொடிகள் பறக்க விடப்பட்டும் அமைதியான முறையில் பயணத்தடை கட்டுப்பாட்டுக் காலத்திலும் வெசாக் பண்டிகை வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.























