ஹட்டன் – கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு செல்லும் பிரதான நுழைவாயில் வீதியில் 06 அடிக்கு பாரிய குழி ஏற்பட்டிருக்கின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக வீதி இன்று இவ்வாறு தாழிறங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பாதிப்பை சரிசெய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




















