கடந்த ஏப்ரல் 17ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வந்தது நடிகர் விவேக் அவர்களின் மறைவு.
அவர் இறப்பதற்கு ஒருநாள் முன்பு தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கொரோனா பற்றியும், தடுப்பூசி பற்றியும் பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
படங்களில் மக்களுக்கு தேவையான கருத்துக்களை சொல்லி வந்த விவேக் அப்துல் கலாம் அவர்களின் ஆசைக்கு இணங்க மரக்கன்றுகள் நட்டு வந்தார்.
பல விஷயங்களில் தனது வாழ்க்கையை மக்களுக்கு நலன் சேர்க்கும் வகையிலேயே வாழ்த்து வந்தார்.
அவர் தடுப்பூசி கூட மக்களுக்காக தான் போட்டுக் கொண்டாராம். தடுப்பூசி பயத்தை போக்கி மக்களிடம் ஒரு விழப்புணர்வு ஏற்படுத்தவே அரசு மருத்துவமனையில் அவர் ஊசி போட்டுக் கொண்டாராம்.
இதனை நடிகர் வையாபுரி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்



















