பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்கும் வெண்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெற்றது. தற்போது சமூகத்தில் நடுத்தர குடும்ப பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகளையும், இதனால் பெண்கள் குழந்தையை வளர்ப்பதற்கு படும் கஷ்டத்தினையும் எடுத்துக்கூறுகின்றது.
இதில் வில்லி வெண்பாவாக ஃபரினா நடித்து வருகின்றார். இவரது நெகட்டிவ் ரோல் மக்கள் மத்தியில் உண்மையான வில்லியாகவே தோன்றி வருகின்றார்.
சமீபத்தில் ரசிகர்களிடம் லைவ் சேட் வந்து பல கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிலையில் தற்போது மற்றொரு பதிவினை போட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளார்.
ஆம் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி என்ற பெயரில் ஹீரோவாக நடிக்கும் நடிகர் அருண் இளம்பெண்களுக்கு அசிங்கமாக குறுந்தகவல் அனுப்பியும், பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளதாகவும், மேலும் குறித்த சீரியலில் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் குறுந்தகவல் ஒன்று தீயாய் பரவி வருகின்றது.
இதனை குறிப்பிட்ட வெண்பா குறித்த ஐடி போலியானது என்று ரசிகர்களை முன்னெச்சிரிக்கை செய்துள்ளதோடு, சிலரின் சேட்டினையும் அனுப்பியுள்ளார்.























