மலையாள சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் ராஜன் பி தேவ். இவரின் மகனாக பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் உன்னி பி தேவ். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான ஒரு வருடத்தில் உன்னி தேவ்வின் மனைவி பிரியங்காவிற்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு உன்னி மனைவியை அடுத்து வந்துள்ளார். இதையடுத்து, பிரியங்கா காவல் துறையிடம் சென்று என்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக புகாரளித்துள்ளார்.
மேலும் அவரும் அவரின் குடும்பத்தினரும் வரதட்சணையாக பணம் கேட்டும் வருகிறார்கள். மனதாலும் உடலாலும் என்னை அடித்து குடும்பத்தகராறில் ஈடுபட்டனர்.
புகாரளித்த அடுத்த நாளே பிரியங்கா தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். 26 வயதே ஆன மனைவி தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் உன்னி தேவ் தான் என்று பிரியங்காவின் உறவினர்கள் எர்ணாக்குளம் போலிசிடம் புகாரளித்தனர்.
அதன்பெயரில் உன்னி தேவ்வை கைது செய்து விசாரித்து வருகிறார்கள் காவல்த்துறையினர்.




















