என்னதான் சினிமா பிரபலங்கள் என்றாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து தான் வருவார்கள். அந்தவகையில் சிலரின் திருமண வாழ்க்கைகூட சினிமா ஒரு தடையாக இருக்கும். தற்போதைக்கு சன் டிவியை காப்பாற்றிக் கொண்டிருக்கும் சீரியல்களில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் சீரியல் ரோஜா.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிப்பரபாகி கொண்டிருக்கிறது. பெரிய ஹிட் கொடுத்து வரும் இந்த சீரியலில் கதாநாயகியாக தெலுங்கு சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி என்பவர் நடித்து வருகிறார். அக்கட தேசத்தைச் சேர்ந்த இவர் தற்போது தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ் சீரியலுக்கு வருவதற்கு முன்னரே இவர் தெலுங்கு சீரியலில் கொடிகட்டி பறந்த நடிகை. அப்படி இருந்த போது பிரபல சீரியல் நடிகர் ராகுல் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தாராம். 2018ல் நிச்சயம் வரை சென்ற காதல், லேசியாவுக்கு ஒரு வேலை விஷயமாக சென்ற ராகுல் அங்கேயே நல்ல வசதியான பெண்ணை பார்த்து காதல் வலையில் விழுந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியது.
பல முறையாவது ராகுல் மலேசியா சென்ற பிறகு அவரை பலமுறை தொடர்பு கொண்டுள்ளார் பிரியங்கா. ஆனால் எதற்குமே சரியான முறையில் அவர் பதிலளிக்கவில்லை என்பதால் ராகுல் தன்னை மறந்து விட்டார் என்பதை அறிந்து சீரியல்களில் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார் பிரியங்கா.
இதை தற்போது மனதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கும் பிரியங்கா நல்கரி, ஹாட் போட்டோஹுட் பக்கம் சென்று ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.



















