இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், ஆக்சிஜன் கிடைக்காமல், சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காமல் நோயாளிகள் தினந்தோறும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் மக்களை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படங்களை டுவிட்டர், இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பிக்பாஸ் புகழ் நடிகையான ஷெரின் போட்டுக் கொண்டார்.
தடுப்பூசி போட்டதில் இருந்து, தனக்கு கடுமையான காய்ச்சல் இருப்பதாகவும், தாங்கமுடியாத உடல் வலி மற்றும் தலைவலி காரணமாக மிகவும் சோர்வுடன் காணப்படுவதாக தெரிவித்துள்ள ஷெரின், தடுப்பூசி வேலை செய்யத் தொடங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இன்று காய்ச்சல் குணமடைந்து, உடல் வலி மட்டும் இருப்பதாக தெரிவித்துள்ள ஷெரின், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.
View this post on Instagram




















