மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் ப்ரிதிவிராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன திரைப்படம் தான் லூசிபர்.
இப்படத்தை பார்த்த தெலுங்கு நடிகர் ராம்சரண், தன் தந்தை சிரஞ்சீவிக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்கும் என கருதி, அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றினார்.
மேலும் தமிழில் பல ரீமேக் படங்களை இயக்கி வெற்றிகண்ட மோகன் ராஜா தான் தெலுங்கு லூசிபர் ரீமேக் இயக்க ஒப்பந்தமானார்.
இதனிடையே கதையில் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை செய்யச் சொல்லியிருந்தாராம் சிரஞ்சீவி. ஆனால் மோகன்ராஜா செய்த மாற்றங்கள் சிரஞ்சீவியை திருப்திபடுத்தவில்லையாம். இதனால் நடிகர் சிரஞ்சீவி இப்படத்தை கைவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிரஞ்சீவியின் இந்த முடிவால் படத்தின் ரீமேக் உரிமையை வேறு தயாரிப்பாளருக்கு விற்க ராம்சரண் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.