பிரான்சில் கடந்த 24 மணி நேரத்திற்கு 684,907 பேர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, பிரான்சில் தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, அங்கு வைரஸ் பரவல் என்பது குறைந்து கொண்டே வருகிறது.
அதன் படி நாட்டில், கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடப்பட ஆரம்பித்ததில் இருந்து, இன்று நேற்று(மே 28-ஆம் திகதி) வரை மொத்தமாக கிட்டத்தட்ட 36 மில்லியன் (35,575, 000) பேருக்கு தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளதாக பிரான்சின் பொதுமக்கள் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் கிட்டத்தட்ட 25 மில்லியன் பேரிற்கு முதலாவது தடுப்பு ஊசிகள் போடப்பட்டுள்ளதாகவும், அதே நேரம் கிட்டத்தட்ட 10.5 மில்லியன் மக்களுக்கு இரண்டாவது அலகு தடுப்பு ஊசிகளும் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரான்சில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 20 சதவீதத்தினர் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.