உலக நாடுகள் முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயினால் அவதிப்பட்டு, தங்களது உயிர்களை மக்கள் காப்பாற்ற முடியாமல் ஓலமிட்டு வருகின்றனர்.
இதற்கான மருந்துகள், ஆக்ஸிஜன், படுக்கை வசதி என எதுவும் இல்லாமல் சாலைகளில் நோயாளிகளை வைத்துக்கொண்டு கதறுகின்றனர்.
இவ்வாறு உலக நாடுகளை எல்லாம் கண்ணீரில் ஆழ்த்தியுள்ள கொரோனாவின் பேரழிவினையும், இதனால் அரசியல் கட்சிகளின் ஆதயத்தினையும் இலங்கை தமிழ் கலைஞர் பாடல் ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.
உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் “முள்ளி வாய்க்கால் மண்ணில் சின்னக்குழந்தைகள் சிதறிக்கிடக்க” என்று வலிமிகுந்த வரிகளால் ஆரம்பமாகி தற்போது ஆட்டிப்படைக்கும் கொரோனா வரையான மக்களின் வலிகளை வெளிக்காட்டியுள்ளனர்.