இலங்கை பிரஜைகள் சீன நிறுவனங்களில் தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள, சீன மொழியைக் கற்றுக்கொள்வது சிறந்தது என்று நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கின்றார்.
ஏற்கனவே தமிழ் மொழியை சீனா திட்டமிட்டு அழித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அமைச்சர் இவ்வாறு சீன மொழி குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கின்றார்.
சட்டமா அதிபர் திணைக்களத்திற்குரிய புதிய கட்டடத்தில் சீனாவின் நிதியுதவியுடன் இலத்திரனியல் நூலகமொன்று அண்மையில் நிர்மாணிக்கப்பட்டது.
அந்த நூலகத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப்பலகை அண்மையில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கியூ ஸென்ஹொங் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.