நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டாக்டர்.
இப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகினர். இதனிடையே இப்படம் பிரபல OTT தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளதாக பல்வேறு தகவல் இணையத்தில் பரவி வந்தது.
இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தின் படக்குழு இப்படத்தை திரையரங்கில் வெளியிட உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இயல்புநிலை திரும்பினால் வரும் செப்டம்பர் மாதம் டாக்டர் படம் தான் முதல் ரிலீஸாக இருக்கும் என கூறப்படுகிறது.