பிரபல நடிகை வைத்த வன்கொடுமை புகாருக்கு, முன்னாள் அமைச்சர் மணிகன்டன், அவரை யாரென்றே தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
’நாடோடிகள்’ படத்தின் நடிகை சாந்தினி நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்று புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் நெருக்கமாக பழகினார் என்றும், திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் வாழ்ந்ததாகவும் கூறினார்.
மேலும் தான் மூன்று முறை கருவுற்ற நிலையில் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவதாக மிரட்டினார் என்றும் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனது மறுப்பை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
சாந்தினி என்பவர் யார் என்று தனக்கு தெரியாது என்றும் தன்னுடன் எடுத்த புகைப்படங்கள் இருப்பதாக கூறி ஒரு கும்பல் தன்னை 3 கோடி கேட்டு மிரட்டியதாகவும், பின்னர் இரண்டு கோடி கொடுங்கள் என்று கூறி கடைசியில் 30 லட்ச ரூபாய் கொடுக்க பேரம் பேசியதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தவறு செய்தவர்கள் தான் பயப்பட வேண்டும் நான் ஏன் பயப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருவரும் அடுத்தடுத்து குற்றச்சாட்டு கூறிவரும் நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



















