இலங்கையில் தற்போது அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்கள் போன்று அடுத்த வாரமும் காணப்பட்டால் நாட்டில் கடும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என சுகாதார பிரிவு, அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் நாளாந்தம் இரண்டாயத்திற்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகாரித்தால், 25, 30 ஆயிரம் நோயாளிகள் வரை சிகிச்சையளிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவிட்டின் நான்காவது அலை நாட்டில் வேகமாக பரவி வருகின்ற நிலையில் இந்த மரபணு வேகமாக பரவி வருகின்றது. நோயாளிகள் பலர் தீவிர நிலைமைக்குள்ளாகியுள்ள நிலையில் ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரிவு அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், நூற்றுக்கு 10 வீதமான நோயாளர்கள் தீவிர நிலையில் இருப்பார்கள் என கணக்கிட முடியும் என சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடிய அதி தீவிர சிகிச்சை பிரிவுகள், மாகாண மட்டத்தில் நிறுவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.