நாரஹென்பிட்டி ஸ்ரீ அபயாராமையில் நேற்றைய தினம் கொவிட் தடுப்பூசி வழங்குவதாக கூறி விட்டு வழங்காமையினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
விகாரையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அறிவித்தமையினால் பெருமளவு மக்கள் அங்கு வருகைத்தந்திருந்தனர்.
எனினும் சுகாதார பிரிவினர் அல்லது கொவிட் தடுப்பூசிகள் அவ்விடத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக அந்த இடத்தில் மக்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் உரிய செயற்பாடு ஒன்று இல்லாமையினால் இந்த முறையில் குழப்பமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டதாக முரத்தேட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் அங்கிருந்தவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதற்கும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.