தமிழ் சினிமாவில் 50 படங்கள் நடிப்பதே வாழ்நாள் சாதனையாக இருந்து கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்கள் நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பல நூறு படங்களையும் தாண்டி நடிப்பார்கள்.
அப்படியான 500 படங்களில் நடித்து திறமை இருந்தும் சினிமாவில் சாதிக்க முடியாமல் போனவர்தான் காமெடி நடிகர் குள்ளமணி. இவர் கரகாட்டக்காரன் படத்தில் அண்ணே நான் வியாபாரி என்னும் கூறும் வசனம் எல்லாம் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது.
அந்த அளவிற்கு இந்த வசனம் பிரபலமானது. 1972ல் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நடித்து வருகிறார். படங்களில் நடித்தும் பலர் சம்பளம் வழங்கவில்லை என்றும் அப்போதே படங்களுக்கான சம்பளம் கொடுத்திருந்தால் கோடிக்கணக்கில் சம்பாத்தித்து நலமுடன் இருந்திருப்பார் நடிகர் குள்ளமணி.
கடந்த 2013ல் கிட்னியில் சில பாதிப்புகள் ஏற்பட்டு உடல் நிலை மோசமானதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் எதிர்ப்பார்க்காமல் அவரது 61வது வயதில் உயிரிழந்துள்ளார்.
இவரின் மறைவு பெரியளவில் பேசப்படாமல் இருந்த போது நடிகர் சரத்குமார் மட்டும் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளாராம். யாரும் கண்டுகொள்ளாமல் அனாதையாக மரணடைந்த குள்ளமணியின் மனைவிக்கு ஆறுதல் கூறி உதவி செய்து சென்றுள்ளார் சரத்குமார்.