யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் தற்போது யாழ். பொது நூலகப் பகுதி, பொலிஸாரின் கண்காணிப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணம் பொது நூலகம் கடந்த 1981ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் திகதி அதிகாலை எரிக்கப்பட்டிருந்தது. இதன்போது பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் தீக்கிரையாகியிருந்தன.
குறித்த நூலகம் 1981ஆம் ஆண்டு தீயூட்டி எரிக்கப்பட்டதன் பின் மீண்டும் கடந்த 2004ஆம் ஆண்டளவில் புனரமைக்கப்பட்டு மீள திறக்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையில் நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதனையடுத்தே நூலகப் பகுதியானது பொலிஸாரின் கண்காணிப்பு வலயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.