பொலிஸ் தலைமையக கட்டடத்தை தெஹிவளை அத்திட்டிய வீதியில் நிர்மானிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பொதுப்பாதுகாப்பு அமைச்சினால் பொலிஸ் தலைமையகத்தை இடம் மாற்றும் யோசனை திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பெல்லன்தொட்ட பகுதியில் காணப்படும் 14 ஏக்கர் காணியில் பொலிஸ் தலையமைகத்தை நிர்மானிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஓரு நூற்றாண்டு காலமாக பொலிஸ் தலைமையகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் தலையமைகத்தை இடம் மாற்றுவதற்கு கொள்கை அடிப்படையில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.



















