கைலாசா நாட்டின் மீது தீவிரவாத தாக்குதல் நடக்க இருப்பதாகவும், கேட்கா மர்ம விதைகளை அனுப்பி ‘பயோவார்’ நடத்த சதி நடப்பதாகவும் சாமியார் நித்யானந்தா அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச்சென்றவர் சாமியார் நித்யானந்தா. இவர் வாங்கிய தனித்தீவில் ஒரு நாட்டை உருவாக்கிவிட்டதாக சொல்லிக்கொள்கிறார்.
அந்த நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்தாக நித்யானந்தாவே கூறியிருந்தார். மேலும், அந்நாட்டில் நாண்யங்கள் அச்சடிப்பு மற்றும் அங்கு வாழும் வாழ்க்கையை பற்றி அவரது முகநூல் பதிவில் தெரிவித்து வந்தார்.
ஆனால், கைலாசா நாடு எங்கிருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. அமெரிக்காவின் கடல்பகுதியில் உள்ள ஏதே ஒரு தீவில் கைலாசா நாட்டை நித்யானந்தா உருவாக்கினாரா? இல்லை இந்தியாவிலேயே இருந்துகொண்டே பேசுகிறாரா என்பது தெரியவில்லை..
இதுவரை அவரது இருப்பிடத்தை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், யூடியூபில் நித்யானந்தா பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆன்மீக சொற்பொழிவும் ஆற்றி வருகிறார்.
இந்நிலையில், நித்யானந்தா தனது நாட்டில் தீவிரவாத அமைப்புகள் ஊடுருவ முயற்சி செய்வதாகவும், நாங்கள் கேட்காத விதைகளை மர்ம நபர்கள் அனுப்பி உள்ளதாகவும், இது ஒரு பயோ வார் என்று கூறியுள்ளார்.
தன்னை பல பேர் பல்வேறு வகையில் தாக்கிவிட்டதால் இந்திய நாட்டை விட்டே வெளியேற வேண்டியதாக அந்த பதிவில் குறிப்பிட்ட நித்யானந்தா, விதைகளை அனுப்பி பயோவார் நடத்த சதி நடப்பதாக கூறியுள்ளார்.
அதன்பின்னர், இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக “பயங்கரவாதத்தை விதைகள்” மூலம் அனுப்பும் கொடிய சதி நடப்பதாகவே நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
ஆனால் அவருடைய வெப்சைட்டில் எங்குமே அட்ரஸ் இல்லை. எனவே எப்படி விதைகளை அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை……



















