கொரோனா வைரஸ் இந்தியாவில் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. இதனால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
மேலும், கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால், பல பிரபலங்கள் உயிரிழந்தும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இதையடுத்து, பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார்(98) மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அவரது மனைவி சாய்ரா தெரிவித்துள்ளார்.