தற்போது நாட்டை திறந்தால் ஏற்பட கூடிய ஆபத்தான நிலைமை குறித்து வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் நாளாந்த அதிகரிப்பு காரணமாக நோயை கட்டுப்படுத்துவதற்காக பயண கட்டுப்பாட்டினை மேலும் ஒருவாரம் நீடிக்குமாறு இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பயண கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் ஓரளவு நோயை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் தற்போதைய நிலைமையில் நாட்டை திறந்த கடுமையான ஆபத்தான நிலைமை ஏற்பட கூடும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டை திறக்க நேரிட்டால் சுகாதார கட்டமைப்பு சீர்குலையும் அச்சுறுத்தல்கள் உள்ளதாக விசேட வைத்தியர் பத்மான குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால் தற்போதைய நிலைமையில் பயண கட்டுப்பாட்டினை நீடிக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது உள்ள பயண கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோயை கட்டுப்படுத்துவதென்றால் ஒரு மாதமேனும் நாட்டை முடக்க வேண்டும் அல்லது பயண கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கடந்த மாதம் அறிவித்தது.
தற்போதைய நிலைமையை ஆராய்ந்து எதிர்வரும் 11ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் உள்ள கொரோனா தடுப்பு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
11ஆம் திகதி முக்கிய தீர்மானத்தை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.