பயணத்தடையை மீறிச் செயற்படுவோர் தனிமைப்படுத்தப்படுவர் என பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரட்ன அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது அமுலில் உள்ள பயணத்தடையை மீறி வீதிகளில் பயணிப்போரை கைது செய்து 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டின் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் அனுமதியுடன் இவ்வாறானவர்களை தனிமைப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக பயணிப்பவர்கள், அனுமதியின்றி பயணிப்பவர்கள் இவ்வாறு எதிர்வரும் நாட்களில் கண்காணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
பொலிஸாரினால் நபர்களை தனிமைப்படுத்த முடியாது எனவும், சுகாதார அதிகாரிகளே அதற்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் குறித்த நபர்களை தனிமைப்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுக்க முடியும் எனவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.