நாட்டில் இயங்கி வரும் சகல மருந்தகங்களையும் மூட நேரிடும் என அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருந்தாளர்கள் மற்றும் மருந்தக பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறு வழங்காவிட்டால் தனியார் மருந்தகங்கள் மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் சுமார் நான்காயிரம் தனியார் மருந்தகங்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயணத்தடை காலத்திலும் நாடு முழுவதிலும் உள்ள மருந்தகங்கள் திறக்கப்பட்டு நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள், நோயாளிகள் உள்ள வீடுகளுக்கு மருந்துகளை விநியோகம் செய்யும் போது பணியாளர்கள் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது என அகில இலங்கை தனியார் மருந்தக சங்கத்தின் தலைவர் சந்திக்க சன்கந்த கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரத்திற்குள் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் மருந்தகங்களை மூட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துரித கதியில் மருந்தாளர்கள் மற்றும் மருந்தக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.