மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பமாவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஒரு முக்கிய ‘புள்ளியைக்’ குறிப்பிடுகின்றார்கள் ஆய்வாளர்கள்.
அந்த முக்கிய புள்ளியில் ஏற்படுகின்ற ஒரு சிறிய தீப்பொறி 3ம் உலக யுத்தம் என்ற பெயரில் பல கோடி உயிர்களைக் காவுகொள்ளக்கூடிய மிகப் பெரிய தீப்பிழம்பை உருவாக்கிடலாம் என்ற எச்சரிக்கையையும் அவர்கள் தொடர்ந்து விடுத்துக்கொண்டே வருகின்றார்கள்.
ஒரு பெரும் நெருப்பிற்கான அந்தத் தீப்பொறி: இஸ்ரேலின் தலைநகர்ஜெருசலேமில் யூதர்கள் கட்டுவதற்கு திட்டமிட்டுவருகின்ற தேவாலயம்.
3ம் தேவாலயம் என்றும், சாலமோன் தேவாலயம் என்றும், ஆங்கிலத்தில் Jewish temple என்றும் அழைக்கப்படுகின்ற அந்த தேவாலயம் மாத்திரம் கட்டப்படுமேயானால், உலக யுத்தம் ஒன்றை யாராலும் தவிர்க்கடியவே முடியாது என்று அடித்துக் கூறுகின்றார்கள்- கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைத்து ஆய்வாளர்களும்.
யூதர்கள் கட்டுவதற்கு திட்டமிட்டுவருகின்ற அந்த 3வது யூத தேவாலயம் பற்றியும், அந்த தேவாலயத்தை நிர்மாணித்தால் உலக யுத்தம் ஏற்படலாம் என்று ஏன் பலரும் அச்சம் கொள்கிறார்கள்.