தற்போது உலக நாடுகள் அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது, கோவிட் தடுப்பூசி போடாதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதாத அமைப்பின் தலைவர் டெட்ரோசு அதானோம் தெரிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு இறுதிப் பகுதியில் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்று தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பரவியுள்ளது.
கோவிட் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 174,353,487 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,751,332 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையாக கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியிருந்தது. இதனால் பெரும்பாலான நாடுகளில் நோய் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், சில நாடுகளில் கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் கோவிட் தொற்றின் புதிய திரிபுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தற்போது அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றின் புதிய திரிபுகள் வேகமாக பரவக் கூடியது. அத்துடன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையிலேயே, கோவிட் தொற்றின் புதிய திரிபுகள் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதாத அமைப்பின் தலைவர் டெட்ரோசு அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘‘டெல்டா உருமாற்றம் உள்பட உருமாற்றம் கோவிட் உலகளாவிய பரவுதல் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கட்டுப்பாட்டை தளர்த்துவது தடுப்பூசி போடாதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்’’ என அவர் எச்சரித்துள்ளார்.