அரசாங்கம் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
சமூக ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்து அரசாங்கம் இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித், அரசாங்கம் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஊடகங்கள் மீது புறச்சக்திகள் அழுத்தங்களை பிரயோகிப்பது ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக சுதந்திரத்திற்காக தமது தரப்பு தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து வகையான ஊடகங்களினதும் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.