நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட் நோயாளர்களினால் தென்கிழக்காசியாவில் கோவிட் நோயாளர்களுக்கான ஒட்சிசன் தேவைப்படுகின்ற அளவில் இலங்கை மூன்றாவது இடத்திலுள்ளது.
அதன்படி, இந்தியாவை விட ஒட்சிசன் தேவையின் அளவில் இலங்கை முன்னிலையிலுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாதிப்புக்குள்ளாகுவோரும் அதிகரிக்கின்றனர்.
இதனால் இனிவரும் காலங்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.