கொரோனா தொற்றுநோய் தொடர்பில் உலகிற்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் சீன இராணுவ விஞ்ஞானி ஒருவர் கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமைக்கு முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த விஞ்ஞானி அதன் பின்னர் ஒரு சில மாதங்களில் மர்மமான முறையில் இறந்துள்ளார். சீன ராணுவத்தில் பணியாற்றிய Yusen Zhou என்ற விஞ்ஞானியே, தடுப்பூசி காப்புரிமைக்கான ஆவணங்களை 2020 பிப்ரவரி 24ம் திகதி தாக்கல் செய்தவர்.
2019 டிசம்பர் மாதமே வூஹான் நகரில் முதல் கொரோனா நோயாளியை அடையாளம் கண்டிருந்தாலும், 2020 மார்ச் 11 வரையில் உலக சுகாதார அமைப்பானது கொரோனா பரவலை பெருந்தொற்று என அறிவிக்கவில்லை.
அதாவது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவும் என சீனா ஒப்புக்கொண்ட இரண்டு வாரத்தில் Yusen Zhou என்ற அந்த விஞ்ஞானி தடுப்பூசி காப்புரிமைக்கு முயன்றுள்ளார்.
அப்படியானால், உலக சுகாதார அமைப்பு கொரோனாவை பெருந்தொற்று என அறிவிக்கும் முன்னரே கொரோனா தடுப்பூசிக்கான பணிகள் துவங்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மட்டுமின்றி, காப்புரிமைக்கு ஆவணங்கள் தாக்கல் செய்த மூன்று மாதங்களில் Yusen Zhou மர்மமான முறையில் இறந்துள்ளார்.
மேலும், சீனாவின் முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவரான Yusen Zhou-ன் மரணம் பிரபல பத்திரிகை எதிலும் வெளிவரவில்லை எனவும் கூறப்படுகிறது.
தற்போது விஞ்ஞானி Yusen Zhou மர்ம மரணம் தொடர்பில் ஜோ பைடன் நிர்வாகம் விசாரணைக்கு முயன்று வருவதாக தெரிய வந்துள்ளது.