ராமாயண கதையை மையமாகக்கொண்டு ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. இதில் ராமராக பிரபாஸ் நடிக்க, ராவணனாக ஹிந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கிறார்.
ரூ.500 கோடி செலவில் இப்படம் உருவாகி வருகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதே போல், இந்தியிலும் ராமாயண கதையை மையமாகக்கொண்டு ‘சீதா’ என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது.
சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள அவர், அப்படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
இந்த தகவல் தற்போது பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.




















