தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
இவர் பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து பெரியளவில் பிரபலமாகியுள்ளார்.
மேலும் அடுத்ததாக இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D43 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள தெலுங்கு திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி இந்த தகவல் உறுதியானால் தெலுங்கில் நடிகை மாளவிகா மோகனன் அறிமுகமாக உள்ள படமாக இது இருக்கும்.



















