தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து பின் தமிழ் படங்கள் கைக்கொடுக்கமுடியாமல் போனதால் பாலிவுட் பக்கம் சென்றவர் நடிகை டாப்சி. நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் போது என்று போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக சில சர்ச்சையில் சிக்கி வரும் டாப்சி டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரருடன் டேட்டிங்கில் இருப்பதாகவும் இருவரும் சேர்ந்து மாலத்தீவுல் ஜோடியாக சென்று இருந்ததாகவும் கிசுகிசு எழுந்தது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்க காதலர் பற்றி டாப்சி பேட்டியொன்றில் கூறியுள்ளார், அதில், சினிமா பிரபலங்கலை காதலித்து திருமணம் செய்யவிருப்பமில்லை. சொந்த வாழ்க்கையையும் தொழில் வாழ்க்கையையும் சார்ந்த வாழ்க்கையை தனித்தனியாக இருக்க நினைக்க விரும்புகிறேன்.
அதுபோல தான் எனக்கு மத்தியாஸ் நெருக்கமானார். அதனால் தான் அவருடன் புகைப்படங்களை எடுத்து வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார். திருமணம் குறித்து 2, 3 படங்களாக ஓரு ஆண்டிற்கு குறையும் போது முடிவெடுக்க தயாராகுவேன் என்றும் கூறியுள்ளார். தற்போது ஒராண்டிற்கு 5, 6 படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் டாப்சி பண்ணு.