பூஜைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்ததாகும்.
இது நமது உடலுக்கும், மனதுக்கும் கற்பூரம் பல்வேறு நன்மைகள் கொடுக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
கைகள், உடலில் ஏதேனும் நமச்சல், எரிச்சல், எரியும் உணர்வு இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேய்த்தால் எரிச்சல் நீங்கும்.
கையில் தொற்றுகளால் ஏதேனும் பாக்டீரியா, பூஞ்சைகளின் வளர்ச்சி இருக்கிறதெனில், ஆணி, நகச்சுத்தி என இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேங்காய் எண்ணெய்யில் பேஸ்ட் போல் குழைத்து தடவினால் குணமாகலாம்.
தலையில் பேன் இருந்தாலும் கற்பூரத்தை தேய்க்க பேன் இறந்துவிடும்.
கற்பூரம் மன அழுத்தத்தை குறைக்கிறது! ஆம், கைகளில் கற்பூர எண்ணெயை தேய்த்து நுகர்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
கால்களில் வெடிப்பு என்றாலும் அதை சரிசெய்ய வெதுவெதுப்பான தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து காலை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும், பின் கால்களில் தேங்காய் எண்ணெய் அல்லது வேஸ்லின் தடவினால் வெடிப்பு காணாமல் போகும்.