ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
4000 ஆண்டுகளான பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையான ஏலக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
பசி எடுக்காமல் இருப்பவர்கள், உணவு சரியாக ஜீரணம் ஆகாதவர்கள் தினமும் ஏலக்காயை வாயில் போட்டு மென்று வர உடலின் மெட்டபாலிஸம் அதிகரிக்கும்.
ஜீரண உறுப்பை வலுவடைய செய்து, ஜீரண நீரை சுரக்க செய்யும்.
இதன் மூலம் நன்றாக பசி எடுக்கும்.
அதிக மார்பு சளி காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் அதிக இருமலினால் அவதிப்படுபவர்கள் ஏலக்காயை தினமும் மென்று வர நெஞ்சில் உள்ள சளி கரைந்து வெளியேறும்.
ஜீரண உறுப்புகளில் ஏதேனும் கோளாறு இருந்தால் வாயில் துர்நாற்றம் ஏற்படும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை சாப்பிட்டு வர துர்நாற்றத்தை போக்கி, நல்ல மணத்தை கொடுக்கும்.
வாய்ப்புண், பற்சொத்தை, பல் வலி, ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை உமிழ்நீருடன் சேர்த்து மென்று வர வேண்டும்.
வாகனங்களில் பயணம் செய்யும் போது மற்றும் வெயிலில் செல்லும் போது ஒரு சிலருக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும். இதற்கு ஏலக்காய் ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது.