பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்வாட்ச் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
உலகின் முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில், பேஸ்புக் நிறுவனமும் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை உருவாக்கி வருகிறது. புது மாடலில் பல்வேறு நவீன அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
தற்போது வெளியாகி இருக்கும் தகவலில் புது ஸ்மார்ட்வாட்ச் கழற்றக்கூடிய கேமராக்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. சந்தையில் கிடைக்கும் மற்ற ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுடனான போட்டியை எதிர்கொள்ள பேஸ்புக் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடலில் வீடியோ கால் மேற்கொள்ள ஏதுவாக கழற்றக்கூடிய கேமராக்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கழற்றக்கூடிய கேமரா 1080 பிக்சல் தரத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்கும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. ஸ்மார்ட்போன்களை போன்றே எதிர்காலத்தில் ஸ்மார்ட்வாட்ச்களையும் பயன்படுத்த வைக்கும் நோக்கில் பேஸ்புக் புது ஸ்மார்ட்வாட்ச்-ஐ உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.