இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
மும்பை,
இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஜூலை 13-ந்தேதி கொழும்பில் நடக்கிறது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றிருப்பதால் இலங்கை தொடருக்கு ஷிகர் தவான் தலைமையில் 2-ம் தர இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், பிரித்வி ஷா, மனிஷ் பாண்டே உள்பட 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான தொடரையொட்டி இந்திய வீரர்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தனிமைப்படுத்தும் நடைமுறை நாளை தொடங்குகிறது. கொரோனா பரிசோதனை எடுத்துவிட்டு மும்பை வரும்படி அனைத்து வீரர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்துதலின் போதும் 6 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். வருகிற 28-ந்தேதி இலங்கைக்கு செல்லும் இந்திய அணியினர், அங்கு சென்றதும் 3 நாட்கள் தனிமைப்படுத்துதலை முடித்து பயிற்சியை தொடங்குவார்கள்.