‘வெப்’ தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் முன்னணி நடிகர்-நடிகைகள் இயக்குனர்கள் ‘வெப்’ தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.
சூர்யா, சத்யராஜ், காஜல் அகர்வால், பிரியாமணி, நித்யாமேனன், மீனா, ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் ‘வெப்’ தொடர்களில் நடித்துள்ளனர். சமந்தாவும் ‘பேமிலிமேன்-2’ மூலம் ‘வெப்’ தொடருக்கு வந்துள்ளார். இந்த தொடர் சமீபத்தில் வெளியானது. இதில் சமந்தாவின் போராளி கதாபாத்திரத்துக்கு வரவேற்பு கிடைத்தது. எதிர்ப்புகளும் கிளம்பின.
இதையடுத்து மேலும் புதிய ‘வெப்’ தொடர் ஒன்றில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இந்த தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இதில் நடிக்க சமந்தாவுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசி
வருவதாக தகவல் பரவி உள்ளது. சமந்தா ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் வாங்குகிறார். ‘பேமிலி மேன்-2’ ‘வெப்’ தொடரில் ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.