முன்பெல்லாம் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தவர்கள் தான் டிவி பக்கம் செல்வார்கள்.
ஆனால், போகப் போக அந்த நிலை மாறியது. கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, ஆர்யா, அரவிந்த்சாமி, பிரகாஷ் ராஜ், விஷால், விஜய் சேதுபதி என பலரும் டிவி பக்கம் பெரிய ஷோக்களை தொகுத்து வழங்கினார்கள்.
விஜய் சேதுபதி அடுத்தாக ‘மாஸ்டர் செப்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியை கன்னடத்தில் ‘நான் ஈ’ சுதீப்பும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.
தமன்னா இதுவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியதில்லை.
முதல் முறையாக இந்த ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார்.